in

நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகள் விதிப்பு

நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகள் விதிப்பு

 

மதியம் 12:25 முதல் ஒரு மணி வரை நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்

வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது

விஜய் செல்வம் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம் கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது.

விஜய் பயணம் செய்யும் சாலையில் பிரதான இரண்டு கட்சிகள் இருப்பதால் அங்கு பிரச்சனைகள் வராத வண்ணம் தன்னார்வலர்களை வைக்க வேண்டும்.

பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது.

பரப்புரை என்பது அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது அப்படி ஏற்படுத்தினால் அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரயில்வே கேட்டிருப்பதால் ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா பெரியார் சிலை தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.

உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிப்பு.

What do you think?

தமிழக வெற்றி கழக கட்சி விளம்பர பேனர்களை கிழித்த மர்ம நபர்கள்

புரட்டாசி மாத வெள்ளிகிழமை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்