in

தமிழக வெற்றி கழக கட்சி விளம்பர பேனர்களை கிழித்த மர்ம நபர்கள்

தமிழக வெற்றி கழக கட்சி விளம்பர பேனர்களை கிழித்த மர்ம நபர்கள்

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை வரவேற்று கட்சி சார்பில் வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விளம்பர பேனர்களை கிழித்த மர்ம நபர்கள்; மாவட்ட தவெக சார்பில் காவல் துறை நிறுவனம் புகார்.

வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார். அதனை தொடர்ந்து நாளை நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

பல கட்ட நிபந்தனைக்கு பின்னர் புத்தூர் அண்ணா சிலை அருகே அவர் உரையாற்றுகிறார் அதற்காக புத்தூர் ரவுண்டானா பகுதியில் கட்சித் தலைவரை வரவேற்கும் கழக நிர்வாகிகள் புகைப்படம் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இரவு மர்ம நபர் பிளக்ஸ் பேனர்களை கிழித்தெறிந்துள்ளனர்.

இதை காலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

விஜய் வருகைக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில் அலங்கார ஆரத்தி

நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகள் விதிப்பு