in

பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர் எ.வ.வேலு

பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர் எ.வ.வேலு

 

மணலூர்ப்பேட்டை அருகே சாலையோர பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி திமுகவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்று உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலூர்ப்பேட்டை பேரூராட்சி பகுதியில் இன்று மாலை நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

 

இந்த நிகழ்வில், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம். கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் நிழற்குடையை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தி விட்டு சென்றார்.

What do you think?

கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உறியடி உற்சவம்