உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு
சீர்காழியில் நாள்தோறும் உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு செய்த போது 30 லிட்டர் டீசல் திருட்டும் அம்பலமானது. காவல் நிலையத்தில் புகார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான பகுதியான தேர் தெற்கு வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு உணவக உரிமையாளர் தனது வீட்டில் வெளிப்புற வளாகத்தில் வெங்காயம், உருளைகிழங்கு மூட்டைகள் வைத்திருப்பது வழக்கம் அவ்வாறு வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம் மூட்டைகள் ஒவ்வொரு நாளும் திருட்டு போனது குறித்து அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தில் 30 லிட்டர் டீசலை கேனில் இருமர்ம நபர்கள் திருடி செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவானது.

இவ்வாறு நாள்தோறும் காய்கறி மூட்டைகள், டீசல் ஆகியவற்றை ஒரே பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


