in

பரமக்குடி அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம்


Watch – YouTube Click

பரமக்குடி அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம்

 

பரமக்குடி அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 20 பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் பகுதிக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த டவுன் பஸ் பரமக்குடி – மதுரை நான்கு வழி சாலையில் திருவரங்கி என்ற இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட்டது.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து முன்னாள் சென்ற டவுன் பஸ் மீது வேகமாக மோதியது.

இதில் ஒரு அரசு பேருந்து சென்டர் மீடியனைத் தாண்டி மற்றொரு பக்கம் நின்றது.

இதில் இரண்டு அரசு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்தன.

இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்த சுமார் 20 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பேருந்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர் ஹரிமுருகன் இயக்கி உள்ளார், என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி மாத கிருத்திகை கஜ வாகனம்

 வடலூர் பகுதி மக்களிடையே அன்புமணி இராமதாஸ் கேள்வி