in

Good Bad Ugly பட பாடல்களுக்கு தடை

Good Bad Ugly பட பாடல்களுக்கு தடை

 

தனது பாடலை அனுமதி இல்லாமல் அஜித் நடித்த Good Bad Ugly படத்தில் பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படத்தில் இளையராஜா இசையில் இசையமைக்கப்பட்ட இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கேட்டு இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ்..இக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ தாங்கள் அனுமதி பெற்ற பிறகு தான் படத்தில் பாடல்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்காததால் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக பாடல்களை பயன்படுத்தியதால் தடை விதித்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு செப்டம்பர் எட்டாம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் திரைப்படத்தில் மூன்று பாடல்களை பயன்படுத்த நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

What do you think?

பொய் வழக்கு போடப்பட்டிருகிறது…நான் யார் என்று நிருபிக்கின்றேன்… சஞ்சனா கல்ராணி

மல்லிகைப்பூவிற்கு அபராதம் கட்டிய நடிகை