சம்பா சாகுபடிக்காக கீழனையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது
கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கீழனையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தேதி தமிழக முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டார். அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணை வந்தடைந்தது.
இந்நிலையில் கீழனையில் தேக்கப்பட்ட தண்ணீர் இன்று கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ள விவசாய நிலங்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கீழனையிலிருந்து தண்ணீரை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதன் மூலம் வடக்கு பிரிவிலிருந்து வடவாறு வடக்கு ராஜன் மற்றும் கஞ்சன் கொள்ளை வாய்க்கால் மூலம் கடலூர் மாவட்டத்திற்கும், கீழ் அணையின் தெற்கு பிரிவிலிருந்து தெற்கு ராஜன் கும்கி மண்ணியார் மற்றும் மேலராமன் வாய்க்கால் மூலம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும் பாசன வசதி பெறுவார்கள்.

கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள
131903 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் மேலும் இன்று திறக்கப்படும் நீர் வீராணம் ஏரி மற்றும் சேத்தியாதோப்பு அணைக்கட்டுகளில் தேக்கப்பட்டு. சென்னைக்கு குடிநீர் வினியோகம் மற்றும் சுற்றியுள்ள 120 கிராமங்கள் பயன்பெறும்.


