in

பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்

 

செஞ்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 105 மாணவர்கள் மற்றும் 111 மாணவிகள் என மொத்தம் 216 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்ப பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உட்பட நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பணிநிரவல் மூலமாகவும் பணிபுரிந்து வருவதால் மாணவர்களின் கல்வி கற்றல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறி பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் ஆசிரியர்களை நியமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று பெற்றோர்கள் மற்றும் அக்கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற நிலையில் அங்கு விரைந்து வந்த அனந்தபுரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராயன் இப்பள்ளிக்கு வந்தார். அவரிடம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கூடுதல் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் எங்களால் ஆசிரியரை நியமிக்க முடியாது எனவே கல்வித்துறை அமைச்சர் மற்றும் மேல் அதிகாரிகளிடம் சென்று கேளுங்கள் என கூறியதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய அக்கிராம மக்கள் எங்களிடம் காசு இல்லாததால் தான் தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசு பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புகிறோம்.

ஆனால் இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் எங்கள் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என்றும் இது குறித்து பல முறை மனு அளித்தும் நிரந்தர ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்கவில்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் இப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்நு பள்ளியை மூடும் சூழல் ஏற்படும் என அக்கிராம பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு செல்லியம்மன் கோயில் பால்குட அபிஷேக விழா

கேப்டன் பிரபாகரன் படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்