மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு செல்லியம்மன் கோயில் பால்குட அபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு புதிய தெரு கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில்.
இக்கோயில் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கந்தாடு, மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.


