in

பூலோக நாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

பூலோக நாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

 

புகழ்பெற்ற நெல்லிக்குப்பம் பூலோக நாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவமும் சமஸ்ரா அபிஷேகமும் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பழமை வாய்ந்த பூலோகநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆம் ஆண்டு நிகழ்வை முன்னிட்டு சமஸ்ரா அபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 108 கலசம் மற்றும் சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு மகா சிவசக்தி ஹோமமும் ஸ்ரீ சுத்த ஹோமமும் நடைபெற்று அதைதொடர்ந்து மகாபூர்ணகதியுடன் முதல் தீப ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை பூலோகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து திருக்கல்யாண வைபவத்திற்கு சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்று ஸ்ரீ புவணாம்பிகை உடனமர் பூலோகநாதர்க்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கும் திருக்கல்யாண வைபவமானது சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

எல்லை காளியம்மன் கோயில் பாலகுட ஊர்வலம்

பாதுகாப்பு படை வீரர் தாக்கியதாக புகார் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு