in

இளையனார்வேலூர் முருகர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

இளையனார்வேலூர் முருகர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

 

இளையனார்வேலூர் முருகர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக்கிருத்திகை முன்னிட்டு இன்று தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம் இறையனார் வேலூர் முருகர் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குட்டியும் நடை பயணமாக வந்து முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இளளையனார் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், கோவில் செயல் அலுவலர் கதிரவன் அறங்காவலர் குழு கோதண்டம், கலியப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிருந்தாவதி சரவணன், மதூர் சுப்பிரமணி உள்ளிட்டார் ஏராளமான பக்தர்களுடன் தரிசனம்.

What do you think?

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா

மாநில அளவிலான சதுரங்க போட்டி