in

மரகதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி காவடி, பாலாபிஷேகம்

மரகதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி காவடி, பாலாபிஷேகம்

 

அச்சரப்பாக்கம் அருகே பெருக்கருணை கிராமத்தில் உள்ள நடு நடுபழனி அருள்மிகு மரகதண்டாயுதபாணி கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி காவடி, பாலாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பெருக்கருணை கிராமத்தில் உள்ள கனகமலையின் மீது நடு நடுபழனி அருள்மிகு மரகத தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையொட்டி மலையின் அடிவாரத்தில் உள்ள விநாயகர், இடும்பனுக்கு பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றன.

அதன் பின்னர், கணபதி ஹோமத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் 108 பேர் பால்குடம் ஏந்தியும் மற்றும் முருக பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு கனக மலையை வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டவாரு மலையேறி கோயிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மூலவரான மரகத தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்கார ஆராதனையும் நடைபெற்றன.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

கோயிலின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

மாநிலங்களுக்குரிய அதிகாரம் தேவை-ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி பேட்டி