in

புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

 

புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது‌.

கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆடி மாதம் தொடங்கிய நாள் முதல் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விழாக்கள் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கிற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலர் அர்ச்சனை குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்ட பின்னர் திருவிளக்கிற்கு பெண்கள் தீபாரதனை காண்பித்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த தமிழக வெற்றி கழகம்

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை