குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த தமிழக வெற்றி கழகம்
வழுத்தூர் ஊராட்சியில் குண்டும் குழியுமாக இருந்த சாலை….. ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சீரமைத்தனர்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் வழுத்தூர் ஊராட்சியில் ரயில்வே ஸ்டேசன் தெரு சாலையில் கற்கள், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
தற்போது இந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்கிறது.
இதனால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இந்த தண்ணீரில் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.
இப்பகுதிக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கைக்கு தமிழக வெற்றி கழகத்தின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி, மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்.
அப்போது சாலை குண்டும் குழியுமாக இருப்பதை பார்வையிட்டு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றி கழகம் சார்பில் உடனடியாக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் லாரியில் ரெட்மிக்ஸ் சிமெண்ட் கலவையை கொண்டு வந்து குண்டு குழியுமாக உள்ள சாலையில் கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி முன்னிலையில் சாலையை சீரமைத்தனர்.

அப்பணியின் போது மாவட்டத் துணைச் செயலாளர் ரம்யாராஜேஷ், பாபநாசம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தினேஷ், பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது,ரவி, சசி, சுதாகர் ,ராம்பிரபு, பாக்கியராஜ், நகர பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ,சுடலைமுத்து, கணேஷ் மற்றும் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


