தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார்.
தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.


