செஞ்சி அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா
செஞ்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வளைகாப்பு விழா …முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் வேட்டவலம் லயன்ஸ் சங்கம் மற்றும் சம்யுக்தா மருத்துவமனை சார்பில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கார்பச்சோ, அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் ஆதிலட்சுமி ஆகியோர் வரவேற்பில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வினோத்,துளசி,சரண்ராஜ், செவிலியர்கள், மற்றும் நிர்வாகிகள் சிங்கம் சேகர், அய்யாதுரை, தொண்டரணி பாஷா, ராமதாஸ், கோகுல், பிரபா, ஹாஜி, பஸ் ஸ்டாண்ட் செல்லன், கணபதி, சக்திவேல், ரஞ்சித், பொதுமக்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.


