in

திருச்செந்தூர் கோவில் கொடியேற்றம்

திருச்செந்தூர் கோவில் கொடியேற்றம்

 

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி கோசம் முழங்க தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1-30க்கு விஷ்வரூப தீபாராதனையுன், 2-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 05-15 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பழம், மஞ்சள், சந்தணம், பஞ்சாமிதம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி கோசம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக -18-ம் தேதி 5 ம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், 20-ம் தேதி 7-ம் திருநாளன்று காலை சுவாமி சண்முகர் எழுந்தருளூம் ஏற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து அன்று மாலை சிவப்பு சாத்தி கோலத்திலும், 21-ம் தேதி 8-ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாள் 23-ம் தேதி நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவினையொட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கூடுதலான பேருந்து வசதி, உள்ளிட்ட தேவையான அனைத்துh அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

What do you think?

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்

 நிலத்தை கையகப்படுத்தி இதுவரை இழப்பீடு வழங்காத சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு போராட்டம்