in

புதுச்சேரி தொண்டமாநத்தம் அருள்மிகு ஸ்ரீ பிடாரி மீனாட்சி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

தலைவாழை இலையில் மணக்க மணக்க ஆட்டுக்கறி கோழிக்கறி விருந்துடன் நடைபெற்ற அருள்மிகு பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கறி விருந்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் அருள்மிகு ஸ்ரீ பிடாரி மீனாட்சி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஸ்ரீ கங்கையம்மன் ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சாய் ஜெ. சரவணகுமார் எம்எல்ஏ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

 

தேரோட்டமானது நான்கு மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் பிரகாரத்தை வந்தடைந்தது. தேரோட்டத்தில் 400 கிலோ ஆட்டுக்கறி மற்றும் 200 கிலோ கோழி கறியுடன் மணக்க மணக்க தலவாழை இலையில் 3000 பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கறி விருந்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

போக்குவரத்து மற்றும் வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் 01.11.2025 முதல் டெல்லிக்குள் நுழைய கட்டாயமான தடை

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்