எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
நாகை பனங்குடியில் உள்ள சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முன்பு இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி 500 கற்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து ஊராட்சிகளில் உள்ள 95% விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியை சேர்ந்தவர்களின் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதால் உரிய வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை )

உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சிபிசிஎல் நிறுவனத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து இன்று காலை முதல் பழங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

