79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாறு வேட போட்டி
கும்பகோணத்தில் கார்த்தி வித்யாலயா தனியார் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாறு வேட போட்டி நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட தேசத் தலைவர்கள் போல் வேடமைந்து அசத்தினார்கள்.
கும்பகோணத்தில், கார்த்தி வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு எல் கே ஜி வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு மாறுவேட போட்டியானது பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாறுவேடப் போட்டியில் பாரதியார், வேலு நாச்சியார், ஜவர்கலால் நேரு, அம்பேத்கார், மகாத்மா காந்தி போன்ற பல்வேறு வேடங்களில் வந்து தேச தலைவர்களை தம் கண்முன்னே நிறுத்தினார்கள்.
மேலும் தேச தலைவர்களின் வாக்கியங்களை வீரத்தோடும் சுதந்திர உணர்வோடும் உச்சரித்து அனைவரின் மனதிலும் சுதந்திர போராட்டத்தை நினைவு படுத்தினார்கள்.
மேலும் 3ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு ஓவிய போட்டியானது நடைபெற்றது. ஓவிய போட்டியில் மாணவ மாணவிகள் தேசிய கொடியினை வரைந்து அழகாக வண்ணம் தீட்டி தேசிய கொடியினை தம் கண் முன்னே நிறுத்தினார்கள்.
4ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய பறவை மயிலினை வரைந்து அழகாக வண்ணம் தீட்டினார்கள். 5ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேசிய விலங்கான புலியினை வரைந்து வண்ணம் தீட்டினார்கள். நிகழ்ச்சி ஆனது மிகுந்த தேசப்பற்றுடன் நடைபெற்றது.
இதில் குழந்தை பருவத்திலேயே தேசத்தை பற்றியும் தேசத்திற்காக போராடிய போராட்ட வீரர்கள் பற்றியும் தேச தலைவர்கள் பற்றியும் தேசிய விலங்கு தேசிய பறவை ஆகியவற்றைப் பற்றியும் அறியும் விதமாக இருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழனை பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், வழங்கினார்.


