in

மின் கசிவு ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்து திடீர் தீ விபத்து

மின் கசிவு ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்து திடீர் தீ விபத்து

 

பாபநாசத்தில் மின் கசிவு ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்து திடீர் தீ விபத்து…. 1 லட்சம் மதிப்பிலான வீட்டிலிருந்த பொருட்கள் சேதம்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மேல ரஸ்தா தெரு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முகம்மது ஜலில் வயது- 60. இவரது மனைவி பரகத் நிஷா வயது -55, இவருக்கு 1மகள் 3மகன்கள் உள்ளனர்.இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்தது.

இதில் வீட்டின் சமையலறையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின், கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி உட்பட அனைத்தும் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினர்.

பின்பு 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

சம்பவம் குறித்து பாபநாசம் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் , பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம் அதிபர் பிரபாகரன் கைது

இவரும் மஹாநதி சீரியல்…லை விட்டு விலகிட்டாரா