புவனகிரியில் புகழ்பெற்ற ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஏக தின லட்சார்ச்சனை விழா
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஏகதின லட்சார்ச்சனை வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
புவனகிரி பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பல்வேறு விழாக்கள் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாசனை மலர்கள் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க லட்ச அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளாசி சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

