in

STUNT மாஸ்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இயக்குனர் பா. ரஞ்சித் இன்று கோர்ட்டில் ஆஜார்

STUNT மாஸ்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இயக்குனர் பா. ரஞ்சித் இன்று கோர்ட்டில் ஆஜார்


Watch – YouTube Click

நாகை அருகே விழுந்தமாவடி பகுதியில் நடந்த வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது விபத்தில் STUNT மாஸ்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் இயக்குனர் பா. ரஞ்சித், சண்டை கலைஞர் வினோத், தயாரிப்பாளர் ராஜ்கமல்,, வாகன உரிமையாளர் பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது அப்போது கார் ஒன்று வேகமாக ஓடி மேலே பறந்து கீழே விழும் காட்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் காருடன் மேலே பறக்கும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து கார் விழுந்ததில் உள்ளே இருந்த STUNT மாஸ்டர் உயிரிழந்தார்.

இதில் மூன்று பேருக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இன்று கீழ்வேளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் & தயாரிப்பாளர் பா. ரஞ்சித், ஆஜர் ஆனார் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

What do you think?

நத்தம் டாஸ்மாக் கடையில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆகவில்லை அதனால் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை