நடிகர் பிரதமை ஆயுதங்கள் காட்டி மிரட்டிய தர்ஷன் ரசிகர்கள்
தர்ஷனின் ரசிகர்கள் நடிகர் பிரதமுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பெங்களூர் கோயிலுக்கு பிரதம் சென்று இருக்கிறார் அப்பொழுது தர்ஷனின் தீவிர ரசிகர்கள் என்று கூறி சிலர் பிரதமை சுற்றி வளைத்து அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு ஆயுதங்களை காட்டி மிரட்டி இருகின்றனர்.
நடிகர் தர்ஷன் மற்றும் அவரது ரசிகர்கள் தன்னை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு பிக் பாஸ் புகழ் பிரதம் பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். “தர்ஷன் சார், தயவுசெய்து உங்களைச் சுற்றி நல்ல சகவாசத்தை வைத்திருங்கள்.
அன்பு மற்றும் மரியாதைக்காக இதைச் சொல்கிறேன். உங்க பசங்களை வரம்புகளுக்குள் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். உங்களுக்கு ரசிகர்கள் இருப்பது போல, எங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தர்ஷன் சாரின் கூட்டாளிகள் ஒழுக்கமானவர்கள் என்றால், அவர்கள் நன்றாக நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அமைதியாக இருக்க மாட்டோம்”. “இதுவரை, மக்கள் என்னுடைய நகைச்சுவை மற்றும் விளையாட்டுத்தனத்தை மட்டுமே பார்த்தார்கள், ஆனால் தர்ஷனின் ரசிகர்கள் அவரது பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.. கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் அங்குள்ள பாதுகாப்புப் படையினரைப் பற்றி நான் எஸ்பியிடம் தெரிவித்துள்ளேன்.
அவர்கள் விசாரிப்பார்கள்.. நான் யாருக்கும் பயப்படவில்லை. எல்லாப் பெயர்களும் வெளியிடப்பட்டால், விஷயங்கள் Viral…லாகும் . இனிமேல் அதிகாரம் செலுத்துவது நடக்காது.
பிரதாமை யாரும் பயமுறுத்த முடியாது. “நாங்களும் எங்கள் உயிரை மதிக்கிறோம். நான் கோபப்பட்டால், விஷயங்கள் கையை மீறிப் போகும். என்று பிரதம் தர்ஷனின் ரசிகர்களை எச்சரித்தார்.


