in

நெல்லை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் போட்டி

நெல்லை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் போட்டி

 

தாமிரபரணி நதியை பாதுகாக்க வலியுறுத்தியும், மரங்களை வளர்த்து பசுமையை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பண்ணை வெங்கட்ராமய்யர் பள்ளி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து இன்று காலை நெல்லை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் போட்டி தொடங்கியது

மாரத்தான் போட்டியை நிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜா விக்னேஷ், சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் இன்னர்வீல் கிளப் திருநெல்வேலி தலைவர் நாகம்மாள் பிச்சுமணி, செயலாளர் தமிழகம் ராஜநாராயணன், முன்னாள் ஆளுநர் சுமதி காந்தி,எக் பவுண்டேஷன் நிறுவனர் நிவேக், எக் பவுண்டேஷன் தலைவர் சபரிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியானது இரண்டு பிரிவில் நடைபெற்றது. 21 கி.மீ, மற்றும் 10 கிலோ மீட்டர் என நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர், மாரத்தான் ஓட்டமானது பசுமை காடுகள் வழியாகவும், கிராமங்கள் வழியாகவும் சென்று செல்லும் வழியில் விதை பந்துகளும் வீசப்பட்டு, மரக்கன்றுகளையும் நட்டனர்.

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டிக்கு நெல்லை ரன்னர்ஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். காஞ்சனா சுரேஷ் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார்,

What do you think?

தென்காசி அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா

எனக்கு அமைதியே ஆறுதல்..ஆர்த்தி