in

ஹரி ஹர வீர மல்லு படம் போர்க்களமா? Bore…களமா?

ஹரி ஹர வீர மல்லு படம் போர்க்களமா? Bore…களமா?


Watch – YouTube Click

பவன் கல்யாண், க்ரிஷ் ஜகர்லமுடி மற்றும் எம்.எம். கீரவாணி.... இந்த மெகா கூட்டணி ஒன்றிணையும் போது, எதிர்பார்புகள் அதிகமாக தான் இருக்கும்…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பவன் கல்யாண் ஹரி ஹர வீர மல்லு படத்தின் முலம் ரசிகர்களை வென்றாரா பார்போம்.

ஒரு திருட்டு கதையை வரலாற்று கதையாக மாற்ற இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். திருடனாக வரும் வீர மல்லு ( பவன்கல்யாண்) பணகாரர்களிடம் இருந்து திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நல்ல திருடன்.

நவாப்-க்கு சேரவேண்டிய வைரங்கலை திருடி ஏழைகளுக்கு கொடுக்கிறார். ஒருகட்டத்தில் நவாப்..பிடம் சிக்க நவாப்..போ தண்டனை கொடுக்காமல் மல்லு…விடம்’ ஒரு டீல் போடுகிறார்.

அதாவது அவுரங்கசீப்பின் டெல்லி செங்கோட்டையில் உள்ள விலைமதிப்பு இல்லாத கோஹினூர் வைரத்தை திருடி வர சொல்ல ஓகே சொல்லிட்டு கூட்டதுடன் மல்லு டெல்லி.. இக்கு பயணம் செய்கிறார்.

கோஹினூர் ..ரை திருடினாரா ? ஆனால் கதாநாயகனின் நோக்கம் அது மட்டும் கிடையாது, அவுரங்கசீப்..க்கும் இவருக்கும் என்ன தொடர்பு ???? என்பதற்கு விடை கொடுக்கும் முதல் பாகத்தில் அல்ல இரண்டாம் பாகத்தில் . நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியதால் பவன் ரசிகர்களை ஏமாற்றாமல் செம்ம ட்ரீட் கொடுத்திருகிறார்.

முதல் பாதியில் வீர மல்லு ராபின் ஹூடை போல் வெளுத்து வாங்குகிறார். ஆரம்பத்தில் முஸ்லிம் தவறானவர்கள் என்று சித்தரித்த இயக்குனர் பிறகு ஹிந்து…களே ஹிந்துகளை கொடுமைபடுத்தும் போது ஹிந்துகளும் தவரானவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் படத்தில் மாத கலவரம் செய்திருக்கிறார்.

முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி இழுவை Second Half..ல இயக்குனர் Effort போட்டிருந்தால் பட்ட கஷ்டம் வீணா போயிருக்காது. பவன் நடிப்பு படத்தை நங்கூரம் போல் நிர்க்கவைக்கிறது.

வீர மல்லு முதல் பாதியில் ஆந்திரா உச்சரிப்பிலிருந்து இரண்டாம் பாதியில் தெலுங்கானா பேச்சுவழக்கிற்கு மாறுவது நெருடல். எம்.எம்.கீரவாணியின் எழுச்சியூட்டும் பின்னணி இசை சிறப்பு ஆனால் திரை கதையில் இருக்கும் ஓட்டையால் இசை நழுவி செல்கிறது.

VFX, குறிப்பாக இரண்டாம் பாதியில் வேந்தும் வேகாமலும் இருக்கிறது. பஞ்சமியாக நடிக்கும் நிதி அகர்வால், வீர மல்லுவின் கூட்டணியில் சேரும் ஒரு தேவதாசியின் மகள்.

உணர்ச்சிபூர்வமான பாத்திரமாக இருந்தாலும் பெரும்பாலும் அழகு பதுமையாக மட்டுமே காட்டி இருக்கிறார்கள். அவுரங்கசீப்பாக வரும் பாபி தியோல் அநியாயதிற்கு அச்சுறுத்தி செல்கிறார்.

சத்யராஜ், நாசர், சச்சின் கெடேகர், சுப்பராஜு, சுனில், ரகு பாபு, மற்றும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட பிற நடிகர்களுக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.

கத்துகிட்ட மொத்த வித்தையும் பவன் கல்யாண் மட்டுமே இறக்கிட்டார். பிரமாண்டமாக உருவெடுத்த திரை காவியத்தை ரசிகர்கள் கழுகி உத்துறமாதிரி பண்ணிடாரு இயக்குனர்.

இயக்கம் கை மாறியதன் விளைவாககூட இருக்கலாம். முதல் பாகத்தில் செய்த தவறை இரண்டாம் பாகத்தில் செய்யாமல் இருந்தால் வெச்ச Suspense..இக்கு வஞ்சனை இல்லாம ரசிகர்களும் பார்பாங்க.

What do you think?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87 வது பிறந்த நாளை பிரமாண்ட உருவத்தினை ஏற்படுத்தி வாழ்த்து

முன்னாள் பிரதமர்களை அவமதித்து பதிவினை வெளியிட்ட நடிகர் விநாயகன்