தற்காப்பு கலை மற்றும் வீர விளையாட்டு கச்சையைக்கட்டு தேர்வு விழா
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை மற்றும் வீர விளையாட்டு கச்சையைக்கட்டு தேர்வு விழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இராஜராஜசோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்ப அறக்கட்டளை சார்பில் தற்காப்பு கலை மற்றும் வீர விளையாட்டு கச்சையைக்கட்டு தேர்வு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிலம்பம் பயிற்சி ஆசிரியர் தினேஷ் தலைமை வகித்தார். மாவட்ட சிலம்ப பயிற்சியாளர் அய்யப்பன் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒற்றைக் கம்பு, வேல் கம்பு, வால் வீச்சு, சுருள் வால் வீச்சு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து அதன் மூலம் தேர்வு செய்தனர்.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட 70 மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன் சிலம்ப ஆலோசகர் குமார் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் சிலம்ப ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


