வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயில் பால்குடம் திருவிழா
மயிலாடுதுறை நகரில் உள்ள பிரசித்திபெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினர் 44 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு. பக்தர்கள் வீதியிலேயே அருள்வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
மயிலாடுதுறையில் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 44 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தும் மஞ்சள் உடை உடுத்திய ஏராளமான சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்தும் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல மேள தாளங்கள் ஒலிக்க 100 க்கனக்கான பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதில் சில பக்தர்கள் வீதியிலேயே அருள்வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.
தொடர்ந்து பால்குடமானது கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கஞ்சிவாத்தல் மற்றும் இன்று மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், பக்தர்களுக்கு மங்களப் பொருட்கள் வாங்குதல் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


