திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு, ரயில் அடியில் சிக்கிக் கொண்டதால் 20 நிமிடம் தாமதமாக சென்ற திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் ரயில்வே போலீசார் விசாரணை.
திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் நேற்று தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தபோது சிதம்பரம் ரயில் நிலையத்திற்கும் 600 மீட்டர் தொலைவில் மீதிகுடி ரயில்வே கேட் பகுதியில் இரவு 8.30 மணி அளவில் வந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும் ரயில் அடிப்பகுதியில் அவர் சிக்கிக் கொண்டதால் திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது பின்னர் விபத்தில் இறந்தவரின் உடலை மீட்ட பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.
இதனை அடுத்து ரயில் விபத்தில் ஒருவர் இறந்து விட்டார் என ரயில் ஓட்டுநர் சீர்காழி ரயில் நிலைய மேலாளரிடம் தகவல் தெரிவித்த நிலையில் சிதம்பரம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இறந்து போன நபர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.


