in

கேரளாவில் இருந்து வந்தவர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

கேரளாவில் இருந்து வந்தவர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

 

பழனிக்கு சாமி தரிசனம் செய்ய கேரளாவில் இருந்து வந்தவர்களின் வேன் கவிழ்ந்து விபத்து- ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி!

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக டெம்போ ட்ராவலர் வேனில் டிரைவர் உட்பட 16 பேர் இன்று காலை பழனி நோக்கி வந்துள்ளனர்.

பழனி நோக்கி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது புஷ்பத்தூர் என்ற இடத்தில் திடீரென வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

16 பேரில் 9 பேர் சிறு காயங்களுடன் முதல் உதவி சிகிச்சை பெற்றனர்.
காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் பெண்கள் உட்பட மூன்று பேர் தலை,முகம், கால் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

செஞ்சி கோட்டையை வரலாற்று சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ