in

குமளம்பட்டு ஸ்ரீ பேசும் பெருமாள் நான்காம் ஆண்டு பிரம்மோற்சவ விழா

குமளம்பட்டு ஸ்ரீ பேசும் பெருமாள் நான்காம் ஆண்டு பிரம்மோற்சவ விழா

 

குமளம்பட்டு ஸ்ரீ பேசும் பெருமாள் என்கிற ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலய நான்காம் ஆண்டு பிரம்மோற்சவ விழா 4-ம் நாள் முன்னிட்டு ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் குமளம்பட்டு ஸ்ரீ பேசும் பெருமாள் என்கிற ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலய நான்காம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் அலங்காரத்தில் ஹம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாளுக்கு நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் பஞ்ச முகத்தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகார வலம் வந்து கிராம இரவு வீதி உலா நடைபெற்றது.

இது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 12-7- 2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சிம்ம லக்னத்தில் நடைபெற இருக்கிறது.

What do you think?

ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளில் வராஹி ராஜ வீதிகளில் வலம்

தங்கள் பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை, ஏரியல் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.