பார்த்து பார்த்து வளர்த்த மகளை, படுகொலை செய்த தந்தை.
5 வருடமாக காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த காதலனை திருமணம் செய்து கொள்வேன் என கரார் காமித்த பட்டதாரி ஆசிரியர், கழுத்தை அறுத்து படுகொலை செய்த தந்தை, கொலை செய்துவிட்டு மூக்கு பிடிக்க மது போதையில் காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றவாளியை போதை தெளிய வைத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த போலீசார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டி.மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அர்ஜுனன். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார். மகள் அபிதா பட்டய படிப்பு படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், அபிதாவிற்கு 27 வயது ஆனதால் அர்ஜுனன் திருமண பேச்சை துவக்கி உள்ளார்.
பெரிய பெரிய வரன்கள் எல்லாம் வந்த போதும் அபிதா திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டுள்ளார். பின்னர் திருமண பேச்சு தொடர்ந்து நடக்கவே அபிதா நான் 5 வருடமாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கரராக பேசி வந்துள்ளார்.
இதனால் அபிதாவிற்கும் தந்தை அர்ஜுனனுக்கும் பலமுறை வாய் தகராறு மன வருத்தங்கள் இருந்து வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அபிதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தகவல் அறிந்த அபிதாவின் அண்ணன் தங்கையை சமாதானம் செய்து வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மறுநாள் விடிந்த வெள்ளி கிழமையும் திருமண பேச்சு நடக்கவே மீண்டும் அபிதாவிற்கும் தந்தை அர்ஜுனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுனன் பெற்ற பெண் என்று கூட பார்க்காமல் தலையில் கட்டையால் முதலில் தாக்கியுள்ளார். மயக்கம் அடைந்த பெண்ணை அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, ரத்தக்கரை இல்லாமல் குளித்துவிட்டு நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார்.

தலைக்கேறிய மது போதையில் அவர் காவல் நிலையத்தில் தனது மகளை கொலை செய்துவிட்டதாக சரணடைந்தார். தொடர்ந்து என்ன காரணம் என்று விசாரணை செய்வதற்காக போலீசார் முயற்சி செய்தபோது தலைக்கேறிய மது போதையால் அர்ஜுனனை போலீசார் விசாரணை செய்ய முடியாமல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று போதை தெரியும் வரை சிகிச்சை அளித்து காத்திருந்து பின்னர் விசாரணை செய்ததில்,
அபிதாவிற்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும், பெரிய பெரிய வரன்கள் வந்ததாகவும் , ஆனால் அவர் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியதால், ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக அர்ஜுனன் போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பார்த்து பார்த்து வளர்த்து, மகளை பட்டதாரியாக பார்த்த கூலி தொழிலாளி அர்ஜுனன், சொல்பேச்சை கேட்காததால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் உச்சகட்ட பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


