திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் முகவர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் முகவர்கள் கூட்டம் மண்டல பெருப்பாளர் அமைச்சர் K.N. நேரு தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில், தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தேர்தல் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயளாரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. மண்டல பொருப்பாளரும், தலைமை கழக அமைப்பு செயலாளரும், நகராட்சி நீர்வளத்துறை அமைச்சருமான K.N. நேரு பேசும்போது, தி.மு.க அரசு அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது என்றும்,
அதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும், இந்த டெல்டா மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் நம் கூட்டனி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.
இக்கூட்டத்தில் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சருமான மெய்யநாதன்.கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் மற்றும் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர மன்ற, ஒன்றிய பேருராட்சி முன்னாள் தலைவர்கள் கழக ஒன்றிய, நகர, பொருப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


