ஆனி திருவிழாவை முன்னிட்டு தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய காவடி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மன்னம் பந்தலை அடுத்துள்ளது தெற்கு வெளி எனும் கிராமத்தில் அருள்பாலித்து வரும் மிக பழமையான ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய காவடி திருவிழா. இக்கோயில் தருமபுர ஆதினத்திற்கு சொந்தமானது..
இந்த ஆலயத்தின் ஆனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது.
இத் திருவிழாவை முன்னிட்டு, மன்னம் பந்தல் காவிரி ஆற்றங்கரையிலிருந்து, கடந்த ஒரு வார காலமாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி எடுத்தும் வீதியுலா வரும் போது. அனைத்து வீடுகளிலும் மா விளக்கு, தீப ஆராதனை எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.

பால்குடம் அலகு காவடி கோயிலை வந்தடைந்து அம்மனுக்கு பாலாபிசேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது..
இந்த காவடி திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குலதெய்வகாரர்களும், பக்தர்களும் அம்மனை வழிபட்டனர்.


