in

சீர்காழியில் பூங்கா இடத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சீர்காழியில் பூங்கா இடத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் முத்து நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புக்கு மத்தியில் பூங்கா உள்ளது.

இந்த இடத்தினை சுமார் 15 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலம்பம், டென்னிஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த இடத்தில் வட்டார கல்வி அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்து ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் இருந்த அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நேற்று பூங்கா முன்பு பூங்கா இடத்தில் வட்டார கல்வி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது முத்து நகரில் உள்ள பூங்கா குடியிருப்பு வாசிகளுக்காக ஒதுக்கப்பட்டது.

இந்த பூங்காவில் இங்கு உள்ள சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மாறாக இந்த பூங்காவில் வட்டார கல்வி அலுவலகம் கட்டக்கூடாது இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் எதிர்ப்பை மீறி வட்டார கல்வி அலுவலகம் கட்ட முயன்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, முபாரக் அலி, முத்து நகர் குடியிருப்பு வாசி சங்கத் தலைவர் அமுதராஜன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

What do you think?

ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை நல்லடக்கம் செய்து வரும் தஞ்சை டாக்டர்

மிக பழமையான ஸ்ரீ மகா ஓம் சக்தி ஆலய மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு