in

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆஷாட நவராத்திரி வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

 

ஆஷாட நவராத்திரியின் இரண்டாம் நாளான மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மங்கள வராகி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் நாள் பால் பன்னீர் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிகிழமை ராகு கால சிறப்பு அலங்கார ஆராதனை

ஆதரவற்ற முதியவர்கள் சடலத்தை நல்லடக்கம் செய்து வரும் தஞ்சை டாக்டர்