அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் ஜாக்பாட் அடித்த நடிகர் கிங்காங்
வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு ஓய்வில் இருக்கும் டி ராஜேந்திரன் நீண்ட நாட்களாக திரை நிகழ்வில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நேற்று வெளியானது Chikitu பாடலில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம் பாட்டம் என்று அசத்தியிருக்கிறார் டி ராஜேந்திரன்.
வரும் ஜூலை 10ஆம் தேதிஅசோக் பில்லர் அருகே உள்ள MKP திருமண மண்டபத்தில் கிங்காங்கின் மகள் திருமணம் நடைபெற இருக்கிறது.
பல முன்னனி நடிகர்களை அவரது வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் கிங் காங் டி.ராஜேந்திரனுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற பொழுது சின்ன வயதில் இருந்தே உன்னுடைய நடிப்பு எனக்கு பிடிக்கும்..யா நான் விரைவில் ஒரு திரைப்படம் இயக்கப் போகிறேன் அதில் உனக்கு ஒரு ரோல் தருகிறேன் … என்னுடைய படத்தில் நீ நடித்ததில்லை ..யா என்று கூறியதும் ரொம்ப சந்தோஷம் ஐயா என்று கூறியிருக்கிறார்.
அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. திருமணத்திர்க்கு முன்னமே பரிசு கொடுத்து அசத்தி இருக்கிறார் டி.ராஜேந்தர்.


