in

கோரிக்கையை செவி மடுக்காததால், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்.

கோரிக்கையை செவி மடுக்காததால், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்.

 

கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை நகர்மன்ற உறுப்பினருக்கு கோரிக்கையை செவி மடுக்காததால், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர், கீழக்கரை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் செயல்பட்டு வரும் நிலையில், இன்று நகர்மன்ற கூட்டமானது நடைபெற்றது. கீழக்கரை நகராட்சியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கக்கூடிய கீழக்கரை நகராட்சியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் உசைன் நகர்மன்ற கூட்டத்தில் தங்களது பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகள் குறித்து இன்று நடந்த கீழக்கரை நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் விவாதித்தார்.

அப்போது அவர் எழுப்பிய கேள்விகளுக்கு நகர் மன்ற தலைவர் பதில் கூறாமல் அதற்கு பதிலாக நகர் மன்ற துணைத் தலைவர் பதில் கூறுவதாக தெரிவித்ததோடு பலமுறை தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டாலும் கூட இந்த நகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று மெத்தனப் போக்கில் இருந்து வருவதாக கூறி நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் சிறிது நேரம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

What do you think?

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் நானி

அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா. 360 டிகிரி கோணத்தில் வட்டமடித்த பறவை காவடி எடுத்த நபர்.