வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பால்குட உற்சவ விழா
சிவகங்கை அருள்மிகு வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பால்குட உற்சவ விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பால்குடம் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நாகத்தம்மன் கோவிலில் இருந்து பால் குடங்களை தலையில் சுமந்து மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வளம் வந்து கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் சமர்ப்பித்த பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபாடு செய்தனர் .


