in

திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா

திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா

 

திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவில் கவுரவர்களில் மூத்தவரான துரியோதனன் நேற்று நடந்த 18ம் நாள் குருஷேத்திர போரில், பீமசேனனால் வீழ்த்தப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த மாதம்02-05-2025 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மேலும் 22-05- 2025 அன்று முதல் மகாபாரத சொற்பொழிவு தெருக்கூத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது., தொடர்ந்து ஜலக்கிரிடை அரசசுனன் தபசு, விராட பருவம், அரவான் கள பலி ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று.

மேலும் இன்று காலை அரவான் பலி மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது பஞ்சபாண்டவர்கள் உடனான குருஷேத்திர போரில் தன் சகோதரர்கள் 99 பேரையும் இழந்த துரியோதனன், நேற்று காலை, தானே களத்தில் இறங்கி போரிட்டார் நீண்ட யுத்தத்திற்கு பின், பீமசேனன், துரியோதனனை கொன்றார்.
கவுரவர்கள் சபையில் துரியோதனனால், அவமானப்படுத்தப்பட்ட திரவுபதியம்மன். துரியோதனன் குருதியை எடுத்து தன் கூந்தலில் தடவி சபதத்தை நிறைவேற்றினார்.

அதே நேரம் தன் மூத்த மகனை இழந்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை அவேசமாக அடித்து விரட்டினார் புத்திர சோகத்தில் அழுது புலம்பினார் தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியை காண திண்டிவனம் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா

வியக்க வைக்கும் அலங்கார மின்விளக்குகளை செய்து அசத்தும் இளைஞர்