in

கோழியை கொன்று, கோழி முட்டைகளை விழுங்கிய கருநாகப் பாம்பு

கோழியை கொன்று, கோழி முட்டைகளை விழுங்கிய கருநாகப் பாம்பு.

 

கோழியை கொன்று, கோழி முட்டைகளை விழுங்கிய கருநாகப் பாம்பு பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.

மற்றொரு இடத்தில் வைக்கோல் போரில் சிக்கி இருந்த 6 அடி நீள நாகப்பாம்பும் மீட்பு.

சீர்காழி அடுத்த வள்ளுக்குடி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வீட்டு வைக்கோல் போரில் கட்டப்பட்டிருந்த வலையில் சுமார் 6 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு சிக்கி சீறியது.

இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற சீர்காழி பகுதியை சேர்ந்த, பாம்பு பாண்டியன் வலையை நறுக்கி அதில் சிக்கியிருந்த நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டார்.

இதே போல் சீர்காழி பகுதியில் மற்றொருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டு கோழியை கொன்று கோழி கூண்டில் புகுந்து கோழி முட்டைகளை விழுங்கிய 6 அடி நீள கருநாகப் பாம்பை, பாம்பு பாண்டியன் மீட்டு வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

What do you think?

தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் படையலிட்டு மலர்தூவியும், தானியங்கள் தூவியும் வரவேற்கப்பட்டது.