சூர்யா 45 படத்தின் டைட்டில் அறிவிப்பு
எழுத்தாளர், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 45 படத்தின் தலைப்பு கருப்பு என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சூர்யா 45 படத்திற்கு கருப்பு என்று பெயரிடப்படலாம் என்றும், ஆர்ஜே பாலாஜி முதலில் த்ரிஷாவுக்காக மாசானி அம்மன் என்ற பெயரில் எழுதிய பக்தி ஸ்கிரிப்ட் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
ரெட்ரோ படதிற்கு பிறகு, நடிகர் சூர்யா தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றில் ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கிய சூர்யா 45.
இயக்குனரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், படத்தின் தலைப்பை வெள்ளிக்கிழமை Poster..ருடன் வெளியிட்டனர். கருப்பு படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார் என்று சமீபத்தில்தகவல் வெளியானது.
இது உண்மையில் ஒரு தெய்வீக படம், மேலும் சூர்யாவும் படத்தில் குல தெய்வமான ‘அய்யனார்’ பக்தராக நடிக்கிறார். கருப்பு படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இந்திரன்ஸ், நடராஜன் “நட்டி” சுப்ரமணியன், ஸ்வாசிகா, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
A Dream Warrior Pictures தயாரிப்பில், இசை சாய் அபயங்கர்.


