in

மதுரையில் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க கோரி கண்ணீர்மல்க புகார் மனு.

மதுரையில் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க கோரி விவசாயிகள் கண்ணீர்மல்க புகார் மனு.

கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள மல்லிகை பூ ,கரும்பு ,விவசாயம் முழுமையாக சேதமடைந்து நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும் , கிரஷர் உரிமையாளர் ஆளுங்கட்சி பிரமுகர் என கூறி தங்களை மிரட்டி வருகிறார்

ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் புகார் அளித்தால் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள் என விவசாயிகள் குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் விராதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதியில் பிரஷர் குவாரி அமைப்பதற்கு கனிமவளத்துறை சார்பில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது அந்த பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு அருகிலயே கிரஷர் குவாரிக்கான பள்ளம் தோண்டப்படுவதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைப்பூ கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்கள் வீணாகி சேதம் அடைந்து வருவதாகவும், மேலும் தூசி வெளியேறுவதால் பொதுமக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகுவதோடு நிலத்தடி நீரும் கீழே செல்லும் இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என கூறி ஏற்கனவே போராட்டம் நடத்திய நிலையிலும் காவல்துறையில் புகார் அளித்த நிலையிலும் தற்போது வரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அரசு அனுமதித்துள்ள கிரஷர் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்

இது குறித்து பேசிய விவசாயிகள் :-

தங்கள் கிராமத்தில் உள்ள விவசாயப் பகுதிகளின் அருகே கிரஷர் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்படுகிறது இதனால் நிலத்தடி நீர் இல்லாமல் விவசாய பாதிக்கப்படும் எனவும் ஏற்கனவே பயிரிடப்பட்ட மல்லிகைப்பூ ,கரும்பு வாழை, உள்ளிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் எனவும்,

இதுகுறித்து கேட்டால் தங்களை ஆளும்கட்சியில் இருப்பதை காரணம்காட்டி மிரட்டுவதாகவும் கிரசர் வெட்டியுள்ள பகுதிகளை சுற்றி கற்களை நட்டபோது அது குறித்து கேட்டதீல் தன்னை அடிக்க முயன்றதாகவும், மேலும் தங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து மிரட்டுவதாகவும் ஆளுங்கட்சி எனக் கூறிக்கொண்டு பஞ்சமி நிலத்தை கையகப்படுத்தி எடுத்து நடத்தி குவாரி நடத்திவருகிறார் எனவும்

இது குறித்து ஏதாவது புகார் அளித்தால் தங்களை லாரி ஏற்றி கொலை செய்துவிடுவோம் என தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்தனர்

எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து உரிமம் அளிக்கப்பட்ட கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

What do you think?

மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார்

மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி பாண்டி கோவில் அம்மா திடல் பகுதியில் முருக பக்தர் மாநாடு 52 நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி