ஜிகர்தண்டா பருத்திப்பால் என்று கேட்டுடாதீங்க – மதுரை விமானி
மதுரையில் இருந்து நேற்று முதல் முறையாக அபுதாபிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் -நம்ம ஊரு flight -னு ஜிகர்தண்டா பருத்திப்பால் என்று கேட்டுடாதீங்க வேண்டுகோள் விடுத்த மதுரை விமானி
மதுரையில் இருந்து அபுதாபிக்கு நேற்று முதல் இண்டிகோ விமான சேவை தொடங்கி உள்ளது. வாரத்துக்கு மூன்று நாட்கள் இயங்கும் விமானம் அபுதாபி இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1: 15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. மதுரையில் இருந்து மீண்டும் 2:35 மணிக்கு அபுதாபிக்கு புறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முதல் முறையாக இண்டிகோ விமான சேவையை தொடங்கிய நிலையில் அந்த விமானத்தை இயக்கிய விமானி மதுரையில் இருந்து அபுதாபி புறப்படும் விமான பயணிகளிடம் நான்கு மணி நேரம் பயணம் இருப்பதாகவும்,3000 கிலோ மீட்டர் தொலைவில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்ம ஊர் flight -னு நினைத்து ஜிகர்தண்டா பருத்தி பால் கட்டாதீங்க கிடைக்காது.. என தெரிவித்தது அங்கே இருந்த விமான பயணிகளிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.


