மன்னிப்பு கேட்க சொன்னாங்க… நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்… சின்மயி
தமிழ் திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாட தடை விதிக்கப்பட்ட பாடகி சின்மயி நீண்ட போரட்டத்திற்கு பிறகு ThugLife படதின்முலம் தனது திறமையை நிருபித்திருக்கிறார்.
2023 ..ஆம் ஆண்டு லோகேஷ் Leo படத்தில் இவருக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்தார். 2018 ஆம் ஆண்டில், மீ டூ இயக்கத்தை முன்னின்று நடத்திய பிறகு சின்மயி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தார்.
டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி மீது மீ டூ இயக்கத்தை சேர்ந்த பெண்களுடன் இணைந்து ஆதரவு குரல் கொடுத்ததால், தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து (SICTADAU) அவர் நீக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டில் வைரமுத்து மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சின்மயி குற்றம் சாட்டினார். அதன் பின்னர், டப்பிங், மற்றும் பாடல் பாட தடை விதிக்கப்படார்.
ThugLife திரைப்படத்தில் முத்த மழை என்ற பாடலை தெலுங்கு மற்றும் ஹிந்தி version..னில் பாடியுள்ளார். முத்த மழை பாடலை சின்மயி ThugLife ஆடியோ நிகழ்சியில் பாடி பலரத்து பாராட்டை பெற்றார்.
ஆறு வருடங்களாக நான் நிறைய கண்ணீர் வடித்தேன் கடவுளிடம் நான் வைத்த பிரார்த்தனைக்கு கிடைத்த பதில் தான் முத்த மழை பாடலின் வெற்றி இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கும் மணிரத்னம் சாருக்கு எனது நன்றி என்று சின்மயி கூறினார்.
திரும்பவும் யூனியனில்’ சேர்வதற்கு மன்னிப்பு கேட்க சொன்னாங்க ஒரு வாரம் முன்பு கூட மன்னிப்பு கடிதம் கொடுக்க சொன்னார்கள் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் அதெல்லாம் முடியாது என்று தெரிவித்து விட்டேன், சந்தா கட்டவில்லை என்று டப்பிங் யூனியனில்’ இருந்து நீக்கினார்கள் ஆனால் வைரமுத்துவை பற்றி மீ டூ..வில் புகார் அளித்ததால் யூனியனில் இருந்து நக்கப்பட்டேன்.
தமிழ் சினிமாவில் அவர் நீக்கப்பட்ட பிறகும் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராகவும் பின்னணி பாடகையாகவும் தொடர்ந்து ஆறு வருட காலம் பணியாற்றினார்.


