கன்னியாகுமரி ஸ்ரீ வெங்கடேஸ்வா் திருக்கோவிலுக்கு வெள்ளி கீாிடம் சமர்ப்பணம்
கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுவாமி ஸ்ரீ வெங்கடேஸ்வா் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் தனிக்கோயில் தயார்களுக்கு வெள்ளி கீாிடம் சமர்ப்பணம். திரளான பக்தர்கள் தரிசனம்.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் லேண்டுகோளின்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா் திருக்கோயிலை அமைத்துள்ளது. இத் திருக்கோவிலுக்கு இந்தியாவின் அனைத்து பகுதி யாத்திரிகர்களும் நாள்தோறும் வந்து வெங்கடேஷ்வரரை வணங்கி செல்கின்றனா.
திருமலையை போல் அனைத்து பூஜைகளும் மூலவருக்க நடைபெறுகின்றன. பிரகாரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயா் மற்றம் ஸ்ரீ ஆண்டாள் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. பக்தர் ஒருவரின் வேண்டுதலின்படி பத்மாவதி தாயாருக்கு கிரீடமும் இரண்டு காதணிகளும், ஸ்ரீ ஆண்டாள் அம்மாவாருக்கு ஆண்டாள் கொண்டையுடன் கிரீடம் இரண்டு காதணிகள் இரண்டு திருப்பாதங்களுமான வெளியிலான பொருள்கள் சுமார் 3 கிலோ ஏடையில் ரூபாய். 3,70,000 மதிப்பில் திருக்கோவிலில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
இதற்காக இன்று காலை நித்திய பூஜைகள் முடிவடைந்ததும் சென்னை வெங்கடேஸ்வரா திருக்கோயில் AEO K. பார்த்தசாரதி யிடம் சகுந்தலா பிரபாகரன் மற்றும் டாக்டர் உலாஷ் ராகவன் குடும்பத்தினர் இந்த வெள்ளி பொருட்களை வழங்கினா்.

ஆலய அர்ச்சகர் சேஷாத்திரி சுவாமிகள் துவார பாலகர்கள் அமைந்துள்ள மண்டபத்தில் கும்ப பிரதிஷ்டை செய்து உலக நன்மைக்கு சங்கல்பம் செய்யப்பட்டு புண்ணியாவாசனம் கும்ப பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் பொருட்களை கும்பநீரால் புனிதப்படுத்தினர்.
அதனை தொடா்ந்து சென்னை ஏஇஓ, திருக்கோயில் பணியாளா் லஷ்மிபதி மற்றும் ஆலய அலுவலக பணியாளா்கள் வெள்ளிபொருட்களை தலையில் சுமந்து கொண்டு கோயில் பிரகாரமாக வந்து மூலஸ்தானத்தை அடைந்தனா்.
ஆலய அா்ச்சகா் அதை பெற்றுக்கொண்டு பெருமாளின் திருவடியில் சமர்ப்பித்து அதன் பின்னர் தாயார்களுக்கு அணிவித்தாா். இந் நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.


