ஆண்டுக்கு ஒரு முறை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் செல்லியம்மன் சிலை
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் அத்திவரதரை போல் கிணற்றிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும் உதிரை வேங்கை மரத்திலான செல்லியம்மன் சிலை
வினோத வழிபாட்டை பாரம்பரியமாக கடைபிடிக்கும் கிராம மக்கள்
கிணற்றில் இறங்கிய பூசாரி குழந்தை போல் செல்லியம்மன் சிலையை மார்போடு அணைத்தவாறு மேலே எடுத்து வந்த காட்சி
வெவ்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து நடத்திவரும் திருவிழா
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அத்திவரதரை போல் கிணற்றிலிருந்து செல்லியம்மன் சாமி உதிரை வேங்கை மரத்திலான சிலையை எடுக்கும் திருவிழா இன்று நடைபெற்றது சென்ற வாரம் காப்பு கட்டி தொடங்கிய திருவிழாவின் முக்கிய அம்ச நிகழ்வாக கிணற்றிலிருந்து சாமி எடுத்தல் விழா விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது மேள தாளங்கள் முழங்க கோவில் பூசாரி ஊர்வலமாக வந்து சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி செல்லியம்மன் சிலையை குழந்தை போல் மார்பில் அனைத்தவாறு மேலே எடுத்து வந்தார்.
இதனைக் கண்ட பக்தர்கள் பொதுமக்கள் பலத்த உற்சாகத்துடன் பக்தி கோஷமிட்டனர் மேலும் எடுக்கப்பட்ட சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டு பழமை வாய்ந்த தேரில் நாளை வீதி உலா நடைபெறும் என்பதும் செல்லியம்மன் இரண்டு பகல் ஒரு இரவு மட்டுமே பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் காட்சியளிப்பார் என்பதும் சிறப்பம்சமாகும் தேர் திருவிழா முடிந்து நாளை இரவு மீண்டும் செல்லியம்மன் கிணற்றுக்குள் வைக்கப்படுவார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிணற்றை தெய்வமாக வழிபட்டு வருவார்.
இந்த திருவிழாவுக்கு சிறப்பு கூட்டும் விதமாக இந்த மருதூர் கிராமத்தில் வெவ்வேறு சமுதாய மக்கள் இணைந்து இந்த திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்தி வருவது சமூக ஒற்றுமைக்கும் ஒரு சான்றாக உள்ளது.


