புனித சலேத் மாதா திருவிழா
தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருவிழா, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் பவனி நேர்த்திகடன்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி புதூரில் 140 ஆண்டு பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்தின் 144 வது ஆண்டு திருவிழா கடந்த 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
நவநாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒவ்வொரு நாள் மாலை 7 மணிக்கு புனித சலேத் மாதா திரு உருவம் தாங்கிய கொடி மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள லா சலேத் திருத்தல பேராலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சலேத் மாதா சுரூபம் தாங்கிய சப்பரம் ஆகியவை ஜெபமாலை ஜெபித்துக் கொண்டு ஊர்வலமாக தேரோடும் வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு திருப்பலிகள் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது. திருப்பலியினை கிழக்கு மாரம்பாடி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில், குஜராத் சேசு சபை அருட்தந்தை பேட்டரிக் ஆகியோர் கூட்டு பாடல் திருப்பலி இணை நிறைவேற்றினர். தொடர்ந்து புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சலேத் மாதா சொரூபம் வைக்கப்பட்ட மின் தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதன்பின் புனித சலேத் மாதா திரு உருவம் தாங்கிய கொடி புனிதப்படுத்தப்பட்டு கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தனம் வியாழக்கிழமை இரவு திருவிழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இரவு 10 மணிக்கு தேரடி திருப்பலி நடைபெறும். தொடர்ந்து புனித சலேத் மாதா புனித பெரிய அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்கள் எழுந்தருளிய உள்ள மின் தேர் அர்ச்சிப்பு, மின் தேர் பவனி வான வேடிக்கை போன்றவை நடைபெற்றன.
இன்று வெள்ளிக்கிழமை பகல் திருவிழாவில் மதியம் 2 மணிக்கு புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்கள் எழுந்தருளிய பகல் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரை சுற்றி முழங்கால் பவனி செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

பகல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 5 மணிக்கு முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி புனித சலேத் மாதாவின் சப்பரத்தை சுற்றி வந்து வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துதல் நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நன்றி திருப்பழியும் இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடை பெற உள்ளது.
இவ்விழா ஏற்பாட்டினை மறவபட்டி புதூர் ஊர் பெரிதானக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


