கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் புதிதாக விதித்திருக்கின்ற விதிகள் நடுத்தர மக்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. முட்டாள்தனமான விதிகள்.

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தர விமல்நாதன், தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. முன்னதாக காந்தி பூங்காவில் தேசிய கொடியுடன் சென்று மகாத்மா காந்தியிடம் மனு அளித்தனர்.
இதில் ரிசர்வ் வங்கி விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கின்ற சில விதிகளை விதித்திருக்கிறார்கள். அதில் நகைகளை அடகு வைக்க செல்லும் போது கடந்த காலங்களில் நகை வாங்கிய ரசீதியை தர வேண்டும். இது சாத்தியமற்ற ஒன்று அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்தனமான விதிகளை அரசு விதித்திருக்கிறது.
அதை திரும்ப பெற வேண்டும் பொதுமக்களின் மீதும் விவசாயிகள் மீது நல்லெண்ணம் நற்சிந்தனை நற்செயல் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி நகை கடன் குறித்து கொள்கையை மாற்றி அமைத்து புதிய கொள்கையை மக்களோடு கலந்து ஆலோசித்து மக்கள் பிரதிநிதிகளோடு ஆலோசித்து அதன் பிறகு வெளியிட வேண்டும். என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சாத்தியமான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு தர வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை தரக்கூடாது.
நெல் குவின்டாலுக்கு 3500 குறைந்தபட்சம் வழங்க வேண்டும். பால் லிட்டருக்கு குறைந்தபட்ச ரூ.50 கொள்முதல் செய்ய வேண்டும்.

பாமாயில் கொள்முதல் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தேங்காய் கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதை பொதுமக்களுக்கு நினைவுகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


