in

திருவிளக்கு பூஜை 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு

திருவிளக்கு பூஜை 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு

 

திருவாடானை அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி கீழ்ப்புலி ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத கரகம் எடுப்பு உற்சவ திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி 4 ஆம் ஆண்டு திருவளக்கு பூஜை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோவிலில் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாகம் சார்பில் பூஜைக்கு தேவையான எண்ணெய், பூ, பழம், தேங்காய், உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர்.

தொடர்ந்து பெண்கள் குத்து விளக்கில் தீபம் ஏற்றி வேத மந்திரங்கள் முழங்கி உலக நன்மை வேண்டி விவசாயம் செழித்திட, திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும் , தீராத நோய்கள் நிவர்த்தி செய்வதற்காக கூட்டு பிரார்த்தனையுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து கிராம நிர்வாகத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது .

What do you think?

மேலூரில் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது ஆண்டு சதய விழா

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்